தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் தற்போது வெளியான விக்ரம் போன்ற அனைத்து படங்களும் பிரம்மாண்டமான வெற்றியை அடைந்துள்ளது என்று சொல்லலாம்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் இணைந்து தளபதி 67ஐ இயக்கப்போவதாக தகவல் ரசிகர்களின் இடையே உலாவி வருகிறது. இந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் விஜய் மற்றும் கமல் குறித்து பேசியுள்ளார்.
அதாவது விஜய் சார் எப்பொழுதுமே செட்டில் அனைவருக்கும் கை கொடுத்து விட்டுதான் உள்ளே வருவார் அதுமட்டுமல்லாமல் அனைவரிடமும் சகஜமாக பேசிப் பழகுவார் என்றும் நடிகர் கமலஹாசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் யார் வந்தாலும் எழுந்து நின்று மரியாதை கொடுப்பார் என்றும் பேட்டியில் பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
