தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதழ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் என அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின.
இந்த படங்களைத் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜுக்கு கிட்டத்தட்ட 10 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் உட்பட பல நடிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்தி நடிகர் சல்மான்கான் அவர்களின் நோட்டீஸ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் 50 கோடி வரை சம்பளம் கொடுக்க பட தயாரிப்பு நிறுவனம் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பலரும் லோகேஷ் கனகராஜை பாராட்டி வருகின்றனர்.