தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் விஜய் சூர்யா ரஜினி என பல நடிகர்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் சமீபகாலமாக பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.
அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது போல விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தநிலையில் ரசிகர் ஒருவர் கோலிவுட் சினிமாவில் ஒரே நம்பிக்கை விக்ரம் திரைப்படம் தான் பார்த்து பண்ணுங்க என லோகேஷ் கனகராஜ்க்கு கோரிக்கை வைத்துள்ளார். இதனை பார்த்த லோகேஷ் இந்த பதிவை லைக் செய்ய ரசிகர்கள் பலரும் அப்போ விக்ரம் கண்டிப்பா நல்ல முறையில் தான் இருக்கும் என கொண்டாடி வருகின்றனர்.