தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவரது இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கி தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ் வாழ்த்துக்கள் தன்னுடைய X பக்கத்தில் பதிவு செய்ய ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நேரம் கிடைத்தால் ஜவான் படத்தை தமிழில் பார்த்து உங்களது கருத்துக்களை சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.
பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை பார்க்க நாங்கள் தயாராகி விட்டோம், என்னுடைய இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள லியோ படத்தை உங்களுடன் சேர்ந்து பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்ட எக்ஸ் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
I’m sure you all got it right very much @iamsrk sir, have already planned to watch #Jawan ❤️
Once #Leo releases would love to watch it with you and know your thoughts on it too 🤗 https://t.co/94JavWAejL
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 6, 2023