தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாரி செல்வராஜ். இவர் கர்ணன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் வடிவேலு குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்து இருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.
அதில் அவர், வடிவேலுவை பார்ப்பதே வாழ்நாள் கனவு தான். உண்மையிலேயே அவர் பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். அவர் தன்னிடம் ‘Life is beautiful’ படத்தை பார்த்துவிட்டு இப்படத்தை ‘நீ இயக்க அதில் நான் நடிக்க வேண்டும்’ என்று ஒருநாள் இரவு முழுவதும் வலியுறுத்தியதாக கூறியுள்ளார். இவர் அளித்திருக்கும் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

director mari selvaraj latest interview about actor vadivelu