Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாவீரன் படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

director mari selvaraj speech viral about maaveeran movie

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கிய பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் ஆகியோரின் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான மாமன்னன் திரைப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வரும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் மாவீரன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடிய மாரி செல்வராஜின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், மடோன் அஷ்வின் மண்டேலாவில் ஒரு வலுவான பாடத்தை எடுத்து தேசிய விருது பெற்றுள்ளார். மாவீரன் ட்ரெய்லரைப் பார்த்ததில் இருந்து அவர் சிவகார்த்திகேயனை நன்றாகப் பயன்படுத்தியிருப்பார் என்று நம்புகிறேன். மாவீரன் இன்னொரு சமூகப் பொறுப்புள்ள படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறி இருக்கிறார் அது தற்போது வைரலாகி வருகிறது.

director mari selvaraj speech viral about maaveeran movie
director mari selvaraj speech viral about maaveeran movie