இயக்குனர் மிஷ்கின் தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னை இயக்குனராக விளங்குகிறார்.
இவர் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் மற்றும் சைக்கோ போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த மிஷ்கின், திடீரென அப்படத்திலிருந்து விலகினார்.
அதன்பின் நடிகர் விஷால் அப்படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். இந்த இந்நிலையில் இயக்குனர் மிஷ்கினின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அந்த திரைப்படம் 2008ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான அஞ்சாதே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது. மேலும் நடிகர் அருண் விஜய்யுடன் மற்ற சில நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.