தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிர்வாகத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் தமன்னா விநாயகம் உட்பட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் சிவராஜ்குமார் உட்பட பல பிரபலங்கள் சிறப்பு வேடங்களில் நடித்திருந்தனர்.
நாளுக்கு நாள் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 250 கோடி வசூலை தாண்டி உள்ள இந்த படத்திற்காக நெல்சன் திலீப்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் ஜெயிலர் படத்திற்காக நெல்சன் கிட்ட 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் திரைப்படம் இரண்டு பேருக்கும் நல்ல கம்பேக் படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
