சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. திருப்பாச்சி படத்தோடு இப்படத்தை ஒப்பிட்டு விமர்சித்து வந்தனர்.
சமூக வலைதளங்களிலும் இப்படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில், அண்ணாத்த படத்தை விமர்சிப்பவர்களை இயக்குனர் பேரரசு கடுமையாக சாடி உள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “திரைப்படத்தில் நிறைகுறை இருக்கத்தான் செய்யும். அதை தேசத்துரோக ரேஞ்சுக்கு வன்மத்தோடும், வக்கிரத்தோடும், நாகரிகமற்றும் சிலர் விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது. சில யூட்யூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது. இருந்தும் அண்ணாத்த வெற்றி அன்னாந்து பார்க்க வைக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.