Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பெர்பாமென்ஸ் வேற லெவல். துணிவு பார்த்து விமர்சனம் கொடுத்த இயக்குனர் பொன்ராம்

director-ponram-about-thunivu-movie review

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இந்த வருட பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் துணிவு.

மஞ்சு வாரியர், சமுத்திரகனி என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார். பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் படத்தைப் பார்த்த இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை பாராட்டி பதிவு செய்துள்ளார். அஜித்தின் நடிப்பு சூப்பர், எச் வினோத் அவர்களின் கான்செப்ட் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது. மொத்தத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படம் வெளியாகி உள்ளது என தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.