தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்தது. 90ஸ் கிட்ஸ் கொண்டாடும் திரைப்படமாக கோமாளி அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து பிரதீப் இயக்கத்திலும் ஹீரோவாகவும் நடித்து வெளியான திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.
தற்போது வரை இந்த திரைப்படம் வசூல் வேட்டையாடி வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவன் என்னுடைய படத்துக்கு இசையமைப்பார் என நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை என பிரதீப் பெருமையாக கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரதீப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யுவன் ஒரு பிராடு, தண்டம் என கூறி பதிவு செய்துள்ள பதிவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து சர்ச்சையில் சிக்க வைத்துள்ளனர். அதேபோல் மங்காத்தா படத்தின் பிஜிஎம் வீடியோவை வெளியிட்டு யுவன் காபி கேட் என விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரையும் பல வருடங்களுக்கு முன்னர் தகாத வார்த்தையால் விமர்சனம் செய்துள்ளார். இந்த பதிவுகளை தோண்டி எடுத்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து பிரதீப்பை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த பதிவுகளுக்கு பிரதீப் என்ன விளக்கம் தரப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.