நடிகர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள “லவ் டுடே” திரைப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படம் ரசிகர்களின் மத்தியில் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் இதுவரை 40 கோடிக்கு மேல் வசூலிக்கு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை பார்த்து இயக்குனர் பிரதீப் ரங்க நாதனை வீட்டிற்கு அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி வாழ்த்து கூறினார். தற்போது ரஜினியை தொடர்ந்து நடிகர் சிம்புவும் போன் கால் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்க நாதனே பாராட்டி வாழ்த்து தெரிவித்து பூங்கொத்தையும் அனுப்பி வைத்திருக்கிறார்.
அதில், அன்புள்ள பிரதீப் லவ் டுடே படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள் என்று நடிகர் சிம்பு குறிப்பிட்டு இருக்கிறார். அதனை பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக எடுத்து தனது நன்றியையும் தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார்.
Thankyou STR @SilambarasanTR_ this ❤️ Your support for me and #LoveToday meant a lot to me from the first phone call u made . Im really happy . Thankyou so much sir . pic.twitter.com/akdwIWF4ey
— Pradeep Ranganathan (@pradeeponelife) November 13, 2022