தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கி பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ஹீரோவாக நடித்து இயக்கிய திரைப்படம் லவ் டுடே. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் நாளுக்கு நாள் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதீப் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளுடன் மூன்றாவது வாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படத்தின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், படத்துக்கும், தனக்கும் ஆதரவளித்த பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி என்றார், டிவி சேனல்கள், ரேடியோ, யூடியூப் சேனல்களின் ஆதரவு அளப்பரியது. மீம் கிரியேட்டர்ஸ், வீடியோ எடிட்டர்கள் ஊக்குவிப்புக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
Thankyou Press and Media .#LoveToday into 3rd week pic.twitter.com/cFsQPnvzKb
— Pradeep Ranganathan (@pradeeponelife) November 19, 2022