Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் ராம் படத்தின் அப்டேட்.. கவனம் ஈர்க்கும் வீடியோ..

director Ram's next titled Yezhu Kadal Yezhu Malai

2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு படக்குழு ‘ஏழு கடல் ஏழு மலை’ என்று தலைப்பு வைத்துள்ளது. மேலும், இதனுடன் மோஷன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.