தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் இணை இயக்குனராக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார் ரத்தினகுமார்.
இந்த நிலையில் தற்போது ரத்தினகுமார் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படம் விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல இருக்காது, அவர்களின் எதிர்பார்ப்பையும் மீறும் அளவிற்கு இந்த படம் இருக்கும் என தெரிவித்துள்ளார். உங்களது எதிர்பார்ப்பை பெரிய அளவில் வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.