Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் ரிஷப் செட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல்

director rishabh shetty meet actor rajinikanth photos update

இந்திய திரை உலகில் என்றும் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். எப்போதும் நடிகர் ரஜினி அவர்கள் நல்ல கதை அம்சத்துடன் வெளியாகும் திரைப்படங்களை பாராட்டி தனது கருத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருவார். அந்த வகையில் அவர் அண்மையில் கன்னட மொழியில் உருவாகி வெளியான காந்தாரா திரைப்படத்தை பற்றி புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு காந்தாரா திரைப்படத்தின் இயக்குனரான ரிஷப் செட்டி அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் பற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது, கன்னட மொழியில் வெளியான காந்தாரா திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருவதை தொடர்ந்து தற்போது இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கின்றது.

இந்த நிலையில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி ரஜினியை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் இதுகுறித்து ரிஷப் ஷெட்டி ட்விட்டரில் கூறியுள்ளதாவது, ஒருமுறை உங்களை புகழ்ந்தால் 100 முறை உங்களை புகழ்வோம், நன்றி ரஜினி சார். எங்களுடைய காந்தாரப் படத்தை பாராட்டியதற்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம் என கூறி உள்ளார். இவரது இந்த உருக்கமான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.