Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்காததற்கு காரணத்தைச் சொன்ன ஆர்.ஜே பாலாஜி.!!

director RJ Balaji mookuthi amman 2 movie

ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கிய இவர் இயக்குனர் நடிகர் என பல திறமையை காட்டி தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் OTT யில் நேரடியாக வெளியானாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் அதற்கான அப்டேட்டையும் கொடுத்து இருந்தது. ஆனால் ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குவார் என்று தகவல் வெளியானது.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்.ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை ஏன் இயக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

அதற்கு பதில் அளித்த ஆர்.ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளிவந்த பிறகு இரண்டாம் பாகத்தை எப்படி உருவாக்குவது என தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் எனக்கு இரண்டாம் பாகம் குறித்து எந்த ஒரு யோசனைகளும் இல்லை எனக்கு எண்ணங்கள் எல்லாம் வேறு கதைகளிலும் வேறு படங்களிலும் இருந்தன இப்போது என்னை சினிமாவில் அறிமுகம் செய்த சுந்தர் இயக்குனர் சுந்தர் சி அப்படத்தை இயக்குகிறார் அது மிகவும் சரியான விஷயம் இதை அவரிடமே நானே கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director RJ Balaji mookuthi amman 2 movie
director RJ Balaji mookuthi amman 2 movie