Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துருவ் விக்ரமுக்கு ஜோடியா..? முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்..!

director rk selvamani about dhruv vikram movie

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சீயான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் ஆதித்யவர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார். தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக தெலுகுவில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

அதோடு இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரோஜாவின் மகள் அன்சிகா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இது குறித்து தற்போது ரோஜாவின் கணவர் செல்வமணி விளக்கமளித்துள்ளார்.

அதாவது தனது மகள் தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார். அவருக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. படிப்பு முடித்து இந்தியா வர நான்கு வருடம் ஆகும். இப்படியான நிலையில் அவர் சினிமாவில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இந்தியா வந்த பிறகு நடிக்க ஆசைப்பட்டால் யாருக்கு ஜோடியாக நடிப்பார் என்பது முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ரோஜாவின் மகள் நடிப்பதாக வெளியான தகவல் உண்மை அல்ல என்பது உறுதியாகி உள்ளது.

director rk selvamani about dhruv vikram movie
director rk selvamani about dhruv vikram movie