Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கப் போகும் ஹீரோ யார் தெரியுமா? வைரலாகும் அப்டேட்

director seenu ramasamy next movie update

கடந்த ஜூன் 23ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க அவருடன் இணைந்து காயத்ரி , கேபிஏசி லலிதா , குரு சோமசுந்தரம் மற்றும் ஷாஜி சென் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை யுவன் சங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் தயாரித்தது மட்டுமின்றி இளையராஜா உடன் இணைந்து யுவன் சங்கர் ராஜா முதல் முறையாக இணைந்த இப்படத்தில் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமின்றி பல சிறப்பு கௌரவ விருதுகளையும் பெற்றது. இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கம் இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வமான லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்க இருக்கும் புதிய படத்தை சீனு ராமசாமி இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் இப்படம் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும் என்று தகவலை கொடுத்திருக்கிறார்.

director seenu ramasamy next movie update
director seenu ramasamy next movie update