Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“ஏ ஆர் ரகுமான் இசையமைக்காததற்கு காரணம் இதுதான்”: இயக்குனர் சங்கர் விளக்கம்

சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி ரிலீஸ்க்கு தயாராகி விட்டது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், விவேக் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். முதல் பாகத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் சங்கர் அளித்த பேட்டி ஒன்றில் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்காதது ஏன் என தெரிவித்துள்ளார். அதாவது இந்தியன் 2 படத்தின் கதை 2.0 படத்தின் போது தான் உருவானது. அப்போதே கமல் சாரிடம் கதையை சொல்லி ஓகே வாங்கி வேலைகளை தொடங்கி விட்டோம்.

அந்த சமயத்தில் ஏ ஆர் ரகுமான் 2.0 படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்தார். இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்தது. ஆகையால் அவரிடம் கேட்க மனமில்லை. அதே நேரத்தில் அனிருத் இசை எனக்கு பிடிக்கும். இதனால் அவரை தன்னுடைய படத்தில் கொண்டு வரலாம் என யோசித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Director Shankar about ar rahman
Director Shankar about ar rahman