Tamilstar
News Tamil News Uncategorised

தேசி விருதுக்கு தகுதியான படம் மாமனிதன் என்று பாராட்டிய பிரபல இயக்குனர் ஷங்கர்

Director Shankar about Vijay Sethupathi

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வமாக அனைவரையும் கவர்ந்து உள்ள நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ என்ற திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் ‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம்தான் “மாமனிதன்”.

இந்த திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். ஜூன் 24 ஆம் தேதியான இன்று இந்த “மாமனிதன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை குறித்து இயக்குனர் ஷங்கர் அவர்கள் நெகிழ்ச்சியுடன் அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் விஜய் சேதுபதி, சீனு ராமசாமி மற்றும் படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

மேலும் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி ‘மாமனிதன்’ படம் மூலம் கிடைத்தது. இயக்குனர் சீனுராமசாமி அவரது இதயத்தையும், ஆன்மாவையும் வைத்து இப்படத்தை ஒரு யதார்த்த படமாக மாற்றியுள்ளார். விஜய் சேதுபதியின் சிறப்பான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது. மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துடன் ஆத்மார்த்தமாக கலந்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.