வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி இவர் பல வெற்றிப்படங்களையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா நெகட்டிவ் கேரக்டர்களையை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யாவின் மீது வருமான வரித்துறையினரால் ஆறு வழக்குகள் தொடரப்பட்டன.
வருமான வரி கணக்குக்கான மறு மதிப்பீட்டு நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால், சென்னை எழும்பூர், அல்லிகுளம் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி எஸ்.ஜே.சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், வருமான வரித்துறையினால் முறையான சோதனை நடத்திய பிறகே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரிக் கணக்கை எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்யாததால் அவர் வழக்கை தள்ளுபடி செய்தார்.