தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். டாப் ஸ்டாராக வலம் வந்த இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தனர். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்து போன பிரசாந்த் சினிமாவை விட்டும் விலகிப் போனார். இந்த சமயத்தில் சரிந்த மார்க்கெட் தான் தற்போது வரை இன்னும் எழாமல் இருந்து வருகிறது.
அடுத்ததாக இவரது நடிப்பில் அந்தகன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இனி பிரசாந்த் மார்க்கெட் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது வரை அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகி வரும் நிலையில் அஜித் அவமதிக்கப்பட்டார் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருப்பது மறக்க முடியாத ஒன்று.
அதாவது பிரஷாந்த் மாலையுடன் கம்பீரமாக நிற்க அவருக்கு பக்கத்தில் அஜித் தலைகுனிந்து நிற்பது போன்ற புகைப்படம் பற்றித்தான் கூறுகிறோம். இந்த புகைப்படம் பற்றி பேட்டி ஒன்றில் தற்போது விளக்கம் அளித்துள்ளார் பிரஷாந்தின் தந்தையும் இயக்குனருமான தியாகராஜன்.
ஒவ்வொரு வருடமும் பிரசாந்தின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். அப்படி ஒரு வருட கொண்டாட்டத்தின் போது அது வந்திருக்கலாம். பிரஷாந்த் பிறந்த நாள் என்பதால் அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது பக்கத்தில் அஜித் நின்று இருந்தார். அவர் யாருக்காகவும் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர் தல என தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிரசாந்த் முன்னிலையில் அஜித் அவமதிக்கப்பட்டதாக வரும் தகவல் உண்மையில்லை என தியாகராஜன் தெரிவித்துள்ளார்.