தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக வெங்கட் பிரபு பிஸியாக இருந்து வரும் நிலையில் மங்காத்தா திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆனது கொண்டாடும் விதமாக சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இதை பார்த்து ரசிகர் ஒருவர் விஜய் படத்தில் பிசியாக இருக்கும் நிலையிலும் அஜித் படம் பற்றி பதிவு செய்ததுதான் சினிமாவில் உள்ள அழகு என பாராட்ட எங்களுக்கு முதலாக வாழ்த்து சொன்னது தளபதி விஜய் தான் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தளபதி விஜயின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Busy working on a #Thalapathy @actorvijay while tweeting this!
Beauty of cinema ❤️ https://t.co/6b2bNYkaU8
— S Abishek Raaja (@cinemapayyan) September 1, 2023