தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் தான் வெங்கட் பிரபு. இவர் பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரனின் மகனாவார். மேலும் இவர் நடிகர் ,பின்னணி பாடகர், கதையாசிரியர், இயக்குனர் போன்ற பல திறமைகளைக் கொண்டவர். இவர் இயக்கிய முதல் படம் “சென்னை 600028”. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற வித்தியாசமான கதைகளை ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் தற்போது வெளியான படம்தான் ‘மாநாடு’. இதில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து லூப் டைம் டிராவல் முறையில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக இயக்கி வெளியிட்டார். இப்படம் சிம்புவிற்கும், இயக்குனர் வெங்கட்பிரபு விற்கும் பெரிய அளவில் வெற்றியை கொடுத்து 117 கோடி ரூபாயை வசூல் செய்தது.
இந்நிலையில் வெங்கட் பிரபுவிடம் தற்போது எடுத்த பேட்டி ஒன்றில் தனக்கு நடிகர் விஜய் அவர்களை மிகவும் பிடிக்கும் என்றும் ஹாலிவுட்டில் வெளியான ‘வில் ஸ்மித்’ என்கின்ற படத்தை பார்க்கும் போது தனக்கு விஜய் அவர்கள் தான் ஞாபகம் வருவார் என்றும் அதேபோல் ஒரு கதையை உருவாக்கி அதில் விஜயை நடிக்க வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார்.