தமிழ் சினிமாவில் வெளியான மாநகரம் என்ற வெற்றி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார்.
பிறகு விஜய் வைத்து மாஸ்டர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் தற்போது மீண்டும் விஜயுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
லியோ படத்துக்கு பிறகு கார்த்தியின் கைதி 2 படத்தை கையில் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து படம் இயக்கப் போவதாக தெரியவந்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாகவும் லியோ ரிலீஸ்க்கு இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் எனவும் தெரியவந்துள்ளது.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பிரபாஸுக்கும் லோகேஷ் கனகராஜ் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.