சியா விதைகள் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக சியா விதையில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. ஆனால் சியா விதைகள் அதிகமாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனைக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் செரிமானத்தையும் பாதிக்கும்.
வயிற்றில் எரிச்சல் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை உருவாக்கக்கூடும் இது மட்டுமில்லாமல் அரிப்பு, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.
மேலும் ரத்த அழுத்தத்தை குறைத்து விடும். சியா விதைகள் உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆனந்தமாக வாழலாம்.