காலிஃப்ளவர் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக காலிஃப்ளவரில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது காலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியும் ஆனால் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது அதன் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலிஃப்ளவர் அதிகமாக சாப்பிடும் போது அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
மேலும் சிறுநீரக கல் பிரச்சனை மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். இதயம் சம்பந்தப்பட்ட நோயாளிகள் மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் அதிகமாக காலிஃப்ளவர் சாப்பிடக்கூடாது.
காலிஃப்ளவர் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் அது உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.