Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என் கேரக்டர் தனித்துவமானது.. சூர்யா 42 குறித்து திஷா பதானி ஓபன் டாக்

disha-patani-unique-role-in-suriya42

இந்திய திரை உலகில் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சூர்யா. இவர் தற்பொழுது வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க இருக்கும் “சூர்யா 42” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தற்பொழுது சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்க, ஆனந்த்ராஜ், கோவை சரளா, கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. தற்பொழுது படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் சூர்யா 42 திரைப்படம் 10 மொழிகளில் 3d இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இப்படத்திற்கான மிரட்டலான மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது. அப்போஸ்டர் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வந்தது.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதை பற்றி முதல்முறையாக நடிகை திஷா பதானி பகிர்ந்திருக்கிறார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அவர், சூர்யா மற்றும் சிவாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. பெரிய திரையில் பிரம்மாண்ட அனுபவத்தைத் தரப்போகும் இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதில் என் கேரக்டர் தனித்துவமானது. இதுவரை நடித்திராத புதுமையான பாத்திரத்தை பார்வையாளர்களுக்கு கொண்டு வருவதில் ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.

 disha-patani-unique-role-in-suriya42

disha-patani-unique-role-in-suriya42