இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கி வரும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இது இவரின் 25-வது படமாகும். இவருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடிக்கிறார். மேலும், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் ஷாபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம் ஆகும்.
இந்நிலையில், நடிகை திவ்ய பாரதி ‘கிங்ஸ்டன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.