கொரொனா இன்னும் எத்தனை பேரை தான் சாய்க்கும் என்று தெரியவில்லை. மக்களிடம் எப்போதும் இணையம் மற்றும் பொதுவெளியில் நல்ல தொடர்பில் இருந்தவர் MLA அன்பழகன்.
இவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது, இந்த நிகழ்வு ஒட்டு மொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
மேலும், அன்பழகன் ஜெயம் ரவி நடித்த ஆதி பகவான் படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது தயாரிப்பான ஆதி பகவான் படத்தின் ஆடியோ ரிலீஸை இந்தியாவுக்கு வெளியில் உலகில் அதிகம் தமிழர் வாழும் நாடான கனடாவில், டொரொண்டோ மாநகரில் நடத்தியிருந்தார்.