தலைவலி பிரச்சனை அடிக்கடி வருவதற்கான காரணத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே தலைவலி அனைவருக்கும் வரும் ஒன்று. ஆனால் அதற்கு பல காரணங்கள் உள்ளது. முதலில் தூக்கமின்மை தலைவலிக்கு முக்கிய காரணமாக அமையும். மேலும் மன அழுத்தம் மற்றும் இரவு வேலை செய்பவர்களுக்கும் இந்த பிரச்சனை வரக்கூடும்.
காலையில் தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உடலில் ரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதே ஆகும். மேலும் அடிக்கடி உடல் சோர்வு மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டால் ரத்த பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.
நாம் காலையில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டாலும் தலைவலி வரக்கூடும்.
எனவே நாம் போதிய அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
இது மட்டும் இல்லாமல் உடலில் சர்க்கரை அளவு அசாதாரணமாக இருந்தாலும் தலைவலி பிரச்சனை இருக்கக்கூடும் எனவே சர்க்கரை அளவை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.