வாய்ப்புற்று நோய் வருவதற்கான அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.
புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணம் மரபணு மாறுபாடு மற்றும் செல்களின் கட்டுப்பாடு அற்ற வளர்ச்சி தான். வாய் புற்று நோய் வாயில் எந்த இடத்திலும் வரக்கூடும். இது தொண்டை பகுதியை கூட பாதிக்கலாம்.
வாய் புற்று நோய் வர முக்கிய அறிகுறிகளான தாடை வீக்கம் , சரியாகத வாய்ப்புண், தொண்டையில் வலி கரகரப்பான குரல் மற்றும் முழுங்குவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
இதில் ஏதேனும் உங்களுக்கு அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. குறிப்பாக மது அருந்துவது புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.