அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட காரணம் என்னவென்று பார்க்கலாம்.
பொதுவாகவே வாய்ப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. இந்த வாய்ப்புண் வந்தால் அதிக சிரமத்தை மேற்கொள்ள கூடும். இந்தப் புண் வந்தால் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் சரியாகிவிடும்.
அடிக்கடி வாய்ப்புண் வந்தால் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி வரக்கூடும். அந்த நேரத்தில் மருத்துவரை அணுகுவது சிறந்தது. பாக்டீரியா ஒவ்வாமை மற்றும் அமிலத்தன்மை பி12 குறைபாடு காரணமாகவே வாய்ப்புண் வரும்.
வாய்ப்புண் அதிகமாக வருபவர்கள் ஆரஞ்சு அண்ணாச்சி மற்றும் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
வாய்ப்புண் குணமாகும் வரை காரம் மற்றும் புளிப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது. வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் மற்றும் அதிமதுரக் பொடியை வாய்ப்புண் இருக்கும் இடத்தில் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஆன்ட்டி செப்டிக் ஜெல் வாய்ப்புண் மீது தடவ வேண்டும்.