பப்பாளி பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாக பழ வகைகளில் அதிகம் உண்ணப்படும் பழங்களில் ஒன்று பப்பாளி. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரி குறைவாகவும் இருக்கும்.
இதனால் உடல் எடை குறைப்பவர்களுக்கு பப்பாளி உதவும். ஆனால் சிலர் பப்பாளியை தவிர்ப்பது சிறந்தது.
முதலில் இருதய நோய் உள்ளவர்கள் அதற்கான மருந்தை சாப்பிடும்பொழுது பப்பாளி பழத்தை சாப்பிடக்கூடாது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பழத்தை தவிர்ப்பது சிறந்தது. இந்த பழத்தை சாப்பிடுவதால் கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.
பிரசவத்தில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இதுமட்டுமில்லாமல் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டால் மோசமான விளைவை ஏற்படுத்தும். தும்மல், இருமல் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளிப்பழத்தை தவிர்ப்பது சிறந்தது