Tamilstar
Health

சர்க்கரை நோய் பாடப்படுத்துதா?அப்போ இந்த ஜூஸ் குடிங்க..!

Do you suffer from diabetes? Then drink this juice

சர்க்கரை நோய் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் குடிக்க வேண்டிய ஜூஸ் குடித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பது சர்க்கரை நோய். இது வந்தாலே உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பாகற்காய் ஜூஸ் மிகவும் நல்லது.

பாகற்காய் ஜூஸ் செய்ய முதலில் பாகற்காயை கழுவி அதனை வெட்டி அதில் உள்ள விதைகளை நீக்கி பிறகு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சிறிது கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து பிறகு வடிகட்டி குடித்து வரவேண்டும்.

அப்படி குடிக்கும்போது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.