சிவகார்த்திகேயனின் படங்கள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரே மகிழ்ச்சி கொண்டாட்டம் தான். அவரின் படங்கள் வர்த்தக ரீதியாக தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நியாயமான லாபம் கொடுப்பதாக கருத்து நிலவி வருகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. ரிலீஸ் ஆகவேண்டிய படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வுக்கு பின் இறுதி கட்ட தயாரிப்பு பணிகள் மட்டும் இருக்கும் படங்கள் தங்கள் பணிகளை தொடர் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர்களும் தமிழ அரசிடம் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கோரியுள்ளனர்.
சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக வுள்ள படம் டாக்டர். கொரோனா நீங்கி இப்படத்தின் இறுதிகட்டப்பணிகள் நவம்பர் மாதத்திற்குள் முடிவடைந்தால் படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.