சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் சில்லு வண்டுகள். குழந்தை நட்சத்திரங்களை வைத்து சுரேஷ் கே வெங்கிடி இயக்கியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும் போது, “மாஸ்டர் படம் இவ்வளவு வசூல் பண்ணியது என்று யாருக்காவது தெரியுமா? தியேட்டர்காரர்கள் சரியான கணக்கை தயாரிப்பாளர்களிடம் கொடுக்க வேண்டும்.
மேலும் இதை அரசாங்கம் நினைத்தால் சரி செய்ய முடியும். ஒரே சர்வரை வைத்து டிக்கெட் விற்பனையை மானிட்டரிங் செய்ய முடியும். எது நல்ல திரைப்படம் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க முடியும்.
திரையுலகின் வளர்ச்சிக்காக அரசாங்கம் டிக்கெட் மானிட்டரிங் முறையை கொண்டு வரவேண்டும் என்று இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.
தயாரிப்பாளரை காப்பாற்றும் சினிமா தான் நல்ல சினிமா. இந்தப்படம் தயாரிப்பாளரை காப்பாற்ற வேண்டும். குழந்தைகளை வைத்து அழகாக படம் எடுத்திருக்கிறார்கள். அதுக்கு எவ்வளவு போராடியிருப்பார்கள். இந்தக்குழந்தைகள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்.