Tamilstar
Health

கொலஸ்ட்ரால் பாடாய்படுத்துதா? அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!

Does Cholesterol Increase? So this news is for you

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் வாங்க பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு கொலஸ்ட்ரால் உள்ளது. இது உடலுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்த கூடும்.
அப்படி கெட்ட கொழுப்புகளை கரைக்க நாம் சில இலைகளை பயன்படுத்தலாம் அதனை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலாவதாக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த துளசியை சாப்பிடுவது நல்லது. இது மட்டும் இல்லாமல் கொத்தமல்லி இலையை சாப்பிடும் போது அது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பது மட்டுமில்லாமல் செரிமானத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக முருங்கை இலை மற்றும் கருவேப்பிலை சாப்பிடும் போது அது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

எனவே ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.