Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரொமான்ஸ் செய்ய தாஜ்மகாலுக்கு சென்ற சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan to do romance at Taj Mahal

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆக்ராவில் நடைபெற்று வருகிறது. அங்கு தாஜ்மகாலில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

don movie shooting shot photos goes viral
don movie shooting shot photos goes viral