நடிகர் சிவகார்த்திகேயனின் டான் கடந்த மே 13ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை தான் நடத்தி வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்த இப்படம் 12 நாள் முடிவிலேயே ரூ. 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் டான் OTTயில் ரிலீஸ் ஆகப்போகிறதாம். அதாவது வரும் ஜுன் 10ம் தேதி NetFlixல் வெளியாகப்போகிறதாம்.
இதைக் கேட்ட ரசிகர்கள் OTTயிலும் இனி சிவகார்த்திகேயனின் டான் பட ஆட்டம் தான் என கூறி வருகின்றனர்.