தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவத்தி என்பவர் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே டாக்டர் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் டான் திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சூரி, பாலசரவணன், குக் வித் கோமாளி சிவாங்கி, ஆர்.ஜே. விஜய் என பலரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், பாலசரவணன், ஆர்.ஜே. விஜய் மற்றும் சிவாங்கி என அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..