தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான டான் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இந்த படம் 78 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் வசூல் சாதனையை சிவகார்த்திகேயன் தகர்த்தெரிந்து புதிய சாதனை படைத்துள்ளார். கூடிய விரைவில் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.