Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள் – ஷகிலா அதிரடி

Don't be fooled by anyone like me - Shakila

மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி பல படங்களில் நடித்துள்ளார். 1990 களில் வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென ரசிகர் வட்டத்தை சேர்த்து புகழ் பெற்றார்.

இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது. இப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கி இருக்கிறார். நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஷகிலா பேசும் போது, எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன்.

என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு மேசேஜாக இந்த திரைப்படம் இருக்கும் என்றார்.