Tamilstar
News Tamil News

மனைவி கர்ப்பமாக இருக்கும்போது மறைந்த நடிகர் சேதுவிற்கு குழந்தை பிறந்தது

கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சேது. இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் கூட.

இவர் வாலிபராஜா என்ற படத்திலும் நடித்தார், அது மட்டுமின்றி சந்தானத்துடன் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார்.

இப்படி தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் சில படங்களில் நடித்து வந்தார் சேது.

இவர் நடிகர் என்பதை தாண்டி மருத்துவர், இவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் முடியாமல் இறந்தார்.

இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நேரத்தில் அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தார்.

தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, இந்த நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.