Tamilstar
Health

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் டிராகன் பழம்.

Dragon fruit lowers bad cholesterol

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க டிராகன் பழம் உதவுகிறது.

இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் வந்து பெரும்பாலும் அவதிப்படுகின்றனர். அதிகமான எண்ணெய் பொருட்களை சாப்பிடும் போது கொலஸ்ட்ரால் உருவாகிறது. இந்த கொலஸ்ட்ரால் இதய நோயையும் உண்டாக்க வழி வகுக்கும்.

நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க டிராகன் பழம் பெருமளவில் உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா. ஏனெனில் இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. மேலும் கால்சியம் புரதம் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இந்த பழத்தை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுகின்றனர்.

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதயத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

மேலும் இந்த பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து பலத்தை கொடுக்கிறது.