தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இந்த திரைப்படம் 10 நாட்களில் உலக அளவில் 105 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வசூலில் ஒரு கோடி எட்டியுள்ளதை போஸ்டருடன் பிரதீப் ரங்கநாதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார்.
#Dragon crosses 100crs pic.twitter.com/RVvQetBy2u
— Pradeep Ranganathan (@pradeeponelife) March 2, 2025