Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

ட்ராமா திரை விமர்சனம்

Drama Movie Review

தமிழகத்தில் ஒரு கிராமத்தில் இருக்ககூடிய காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பதவி ஏற்கிறார் ஜெய்பாலா. அவருடன் அதே காவல் நிலையத்தில் பலரும் பணிபுரிகிறார்கள். அதில் ஏட்டாக சார்லி பணியில் இருக்கிறார். ஜெய்பாலாவின் காதலியான காவ்யா பாலுவின் பிறந்தநாள் தினத்தை சக காவலர்கள் அந்த காவல் நிலையத்தில் கொண்டாடுகின்றனர். எதிர்பாராத விதமாக மின்சாரம் துண்டிக்க காவல் நிலையத்தில் இருக்கும் சார்லியை யாரோ கொலை செய்துவிடுகின்றனர்.

கொலைக்கான பின்னணி காரணம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள விசாரணை அதிகாரி கிஷோர் வருகிறார். யார் இந்த கொலையை நிகழ்த்தியது? இந்த கொலைக்கான காரணம் என்ன? இது அனைத்தையும் கிஷோர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. ஒரே இடத்தில் நடக்கும் கதையை எடுத்துக் கொண்டு அதை திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தது பாராட்டக்குறியது இருந்தும் படத்தின் திரைக்கதையில் சுவாரசியம் இல்லை. சில காட்சிகளில் ஒரே டேக்கில் எடுத்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் அஜூ கிழுமலா. திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். படம் மிகவும் பொறுமையாக செல்வது தொய்வு ஏற்படுத்துகிறது. காவல் அதிகாரியாக வரும் கிஷோர் குமார் அவருடைய முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார். சார்லியின் நடிப்பு ஆழமானதாக தென்படுகிறது. ஜெய் பாலா, வின்சென்ட் நகுல், வினோத் முன்னா, காவ்யா பெல்லுவின் நடிப்பு புதுமுக நடிகர்கள் என்ற எண்ணத்தை வரவைக்கிறது. இவர்கள் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரே காவல் நிலையத்தில் நடக்கும் கதை என்பதால் கவனசிதறல் ஏற்படுக்கிறது. ஒளிப்பதிவாளர் ஷினோஸ் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பிஜிபாலின் இசை ரசிக்கும்படி இல்லை. மொத்ததில் ட்ராமா – சுவாரஸ்யம் இல்லை.

 Drama Movie Review

Drama Movie Review