கோலிவுட் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இப்படங்களில் வெற்றியைத் தொடர்ந்து இவரது நடிப்பில் சமீபத்தில் DSP திரைப்படம் வெளியானது.
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. டி இமான் இசையமைப்பில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து, அனுகீர்த்தி வாஸ், பிரபாகர், இளவரசு, தீபா சங்கர், புகழ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி DSP திரைப்படம் வரும் டிசம்பர் 30ஆம் தேதி netflix ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
Tamil Film #DSP Will Premiere On December 30th On Netflix pic.twitter.com/UqhDQ66Rsr
— OTT Streaming Updates (@streamngupdates) December 23, 2022