Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வளர்ந்த முடி, தாடி என அடையாளம் காண முடியாத லுக்கில் நடிகர் துல்கர் சல்மான்- வேறலெவல் லுக்!

மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். மம்முட்டி மகன் என்ற பெயரோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

அங்கிருந்து தமிழில் சில படங்கள் நடித்த அவர் ஹிந்தியில் ஒரு படம் நடித்தார். அடுத்தடுத்தும் புதிய படங்கள் ஹிந்தியில் நடிக்க இருக்கிறார்.

இதற்குள் லாக் டவுன் இத்தனை நாட்கள் தன்னுடைய குடும்பத்துடன் அனைவரை போல் நேரம் செலவழித்துள்ளார். தற்போது ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் துல்கரின் தலை முடி வளர்ந்து தாடியுடன் வேறு ஒரு ஆளாக காணப்படுகிறார். அந்த லுக்கை பார்த்த ரசிகர்கள் இது இன்டர்நேஷ்னல் லெவலில் லுக் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.